search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு அரசு"

    • காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.
    • பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும்திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்படடுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

    மேலும், திரும்பப் பெறும் பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

    கோவை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த வேணடும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது.
    • டிஜிட்டல் நிலஅளவை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநிலஅளவை பணியினை நவம்பர் 1-ம் தேதி முதல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்பொருள் குறித்து ஏற்கெனவே கடந்த 09-11-2022 அன்று வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள். இருப்பினும், மீண்டும் இது குறித்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

    கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன் சோலை வட்டத்தினை சார்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை ஆகிய கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளை சரிபார்த்திட கூட்டம் நடத்துவதற்கு தேனி மாவட்டம் நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

    அதில், மாநில எல்லைகள் தொடர்புடைய பதிவேடுகளை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது.

    மேற்குறிப்பிட்ட விவரப்படி தொடர்புடைய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு தேதியினை முடிவு செய்து தகவலினை கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு கடித வரைவு மூலம் தெரிவிக்கவும், அந்த கூட்டு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.

    மேலும், இது தொடர்பாக தமிழக - கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நிலஅளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    எனினும், தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நிலஅளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • எட்டு விடுமுறை நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தைப் பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்த தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை 56,223 தேர்வர்கள் எழுத உள்ளனர். அறை ஒன்றுக்கு 20 தேர்வர்கள் வீதம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக நாமக்கல் வட்டத்தில் 43 தேர்வு மையங்களில் 13,722 தேர்வர்களும், ராசிபுரம் வட்டத்தில் 47 தேர்வு மையங்களில் 13,978 தேர்வர்களும், மோகனூர் வட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 2,239 தேர்வர்களும், சேந்தமங்கலம் வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4,318 தேர்வர்களும், திருச்செங்கோடு வட்டத்தில் 42 தேர்வு மையங்களில் 12,048 தேர்வர்களும், பரமத்திவேலூர் வட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 6,612 தேர்வர்களும், குமாரபாளையம் வட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3,306 தேர்வர்களும் என மொத்தம் 132 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 191 தேர்வு மையங்களில் 56,223 தேர்வர்களும் போட்டித்தேர்வினை எழுதுகின்றனர்.

    இந்த தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கு தவறாமல் வந்து விடவேண்டும். தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வின்போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த குறும்பட விளக்க காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    முக்கிய துறைகளில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IASOfficers #TNGovernment
    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    ஈரோடு கலெக்டராக இருந்த பிரபாகர் கிருஷ்ணகிரிக்கும், மதுரை கலெக்டராக இருந்த வீர ராகவ ராவ் ராமநாதபுரத்திற்கும், சென்னை கலெக்டராக இருந்த அன்புசெல்வன் கடலூருக்கும், கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த கதிரவன் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நடராஜன் மதுரைக்கும், அண்ணா தொழிலக நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த சண்முக சுந்தரம் சென்னை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

    பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் தொல்லியல் துறைக்கும், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுதவிர, பல முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
    ×